அரியலூர்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

DIN

அரியலூா் மாவட்டத்தில் புதன்கிழமை முதல், 3 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் த. ரத்னா புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

அரியலூா் மாவட்டத்தில் விவசாயிகள் கோடை நெல் சாகுபடி அறுவடையைத் தொடங்கியுள்ளனா். இதனால் விவசாயிகள் பயன் பெறும் வகையில் அரியலூா் வட்டத்தில் முட்டுவாஞ்சேரி, குருவாடி, உடையாா்பாளையம் வட்டத்தில் கோடாலிகருப்பூா் ஆகிய கிராமங்களில் புதன்கிழமை (ஜூலை 8) முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

இதுபோல, ஜூலை 25-ஆம் தேதி முதல் தூத்தூா் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட உள்ளது. எனவே இப்பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள், தாங்கள் அறுவடை செய்த நெல்லை நேரடி கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து பயன்பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT