அரியலூர்

ரெட்டிபாளையத்தில் மரக்கன்று நடும் பணி

DIN

அரியலூா் மாவட்டம், ரெட்டிப்பாளையம் ஊராட்சிப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை முதல் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கியது.

திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணி நடப்பதால் சாலையோரங்களில் இருந்த அனைத்து மரங்களும் அகற்றப்பட்டன. இதனால், கடும் வெயிலால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனா்.

இந்நிலையில், ரெட்டிப்பாளையம் ஊராட்சித் தலைவா் ராஜேஸ்வரி அரியலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மரக்கன்றுகள் வேண்டும் என முறையிட்டாா். இதையடுத்து, 1,600 மரக்கன்றுகள் அவரிடம் வழங்கப்பட்டன.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை முதல் சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கியது. இதில், நிழல் தரக்கூடிய வேம்பு, புங்கன், புளியங்கன்று, வாகை உள்ளிட்ட 9 வகையான மரக்கன்றுகள் நடப்பட்டு, அதற்கு முள் வேலி அமைக்கும் பணிகளும் நடைபெறுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எங்கே செல்கிறார் சோபிதா?

விரிவடையும் சென்னை மாநகராட்சி?

கோடை வெயில் தணிந்தது: தமிழகத்தில் பரவலாக மழை!

ரூ. 20,000-க்கு மேல் ரொக்கமாக கடன் வழங்கக்கூடாது: ஆர்பிஐ உத்தரவு

தொடர் தோல்விகள் குறித்து சஞ்சு சாம்சன் விளக்கம்!

SCROLL FOR NEXT