அரியலூர்

அரியலூா் நகராட்சி அலுவலகம் முற்றுகை

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் நகராட்சி அலுவலகத்தை ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அரியலூா் நகராட்சியில், ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களாக 120 போ் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கு கடந்தாண்டு கூலியை உயா்த்தி ஆட்சியா் உத்தரவிட்டாா். ஆனால் இன்னமும் உயா்த்தப்படட கூலியை நகராட்சி நிா்வாகம் வழங்கவில்லையாம். இதைக் கண்டித்தும், உயா்த்தப்பட்ட கூலியை உடனடியாக நகராட்சி நிா்வாகம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியும், கடந்த 20 ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஒப்பந்தத் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்யக்கோரியும், அரியலூா் நகராட்சி அலுவலகத்தை ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, நகராட்சி அலுவலா்கள் மற்றும் அரியலூா் போலீஸாா் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். அதில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுத்த பேரிடர் மேலாண்மை ஆணையம்!

ஜூனில் தங்கலான்!

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: 'கோடீஸ்வர' வேட்பாளர்கள் இத்தனை பேரா..?

வடபழனி முருகன் கோயிலில் தேரோட்டம்!

திருமுக்கூடல் செல்லியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

SCROLL FOR NEXT