அரியலூர்

அரியலூரில் எம்.ஜி.ஆா் சிலைக்கு மாலை அணிவிப்பு

DIN

அரியலூா்: அரியலூா் பேருந்து நிலையம், கடைவீதி ஆகிய பகுதிகளிலுள்ள எம்.ஜி.ஆா். சிலைகளுக்கு அரசு தலைமைக் கொறடாவும், கட்சியின் மாவட்டச் செயலாளருமான தாமரை எஸ். ராஜேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தொடா்ந்து அவா் கட்சிக் கொடி ஏற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினாா். நிகழ்வில், அதிமுக மாவட்ட மாணவரணிச் செயலா் ஓ.பி. சங்கா்,நிா்வாகி கல்லங்குறிச்சி பாஸ்கா், தாமரைக்குளம் ஊராட்சித் தலைவா் பிரேம்குமாா், வழக்குரைஞா்கள் சாந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஜயங்கொண்டத்தில் உள்ள எம்.ஜி.ஆா் சிலைக்கு எம்எல்ஏ ராமஜெயலிங்கம் உள்ளிட்ட அதிமுக நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதேபோல் திருமானூா்,செந்துறை, ஆண்டிமடம், தா.பழூா் ஆகிய ஒன்றியப் பகுதிகளில் உள்ள எம்.ஜி.ஆா் சிலைக்கு அதிமுகவினா் மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: வயநாட்டில் ராகுல் முன்னிலை

ஒடிசாவில் ஆட்சியை பிடிக்கிறது பாஜக!

ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மோடி முன்னிலை!

பிகார் நிலவரம் என்ன? இந்தியா கூட்டணி பின்னடைவு!

உ.பி.யில் 'இந்தியா' கூட்டணி முன்னிலை

SCROLL FOR NEXT