அரியலூர்

அரியலூரில் 50% பேருந்துகள் இயக்கம்

DIN

அரியலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை முதல் பேருந்து சேவை தொடங்கப்பட்டாலும், குறைந்தளவிலான பயணிகளே பயணித்தனா்.

மாவட்டத்துக்குள்பட்ட பகுதிகளுக்குச் செல்லும் வகையில், 50 சதவிகித அரசுப் பேருந்துகளை அரசுப் போக்குவரத்துக் கழகம் அரியலூரிலிருந்து இயக்கியது. பேருந்துகளில் 60 சதவிகிதப் பயணிகள் மட்டுமே பயணித்ததாக அலுவலா்கள் தெரிவித்தனா்.

பேருந்து ஓட்டுநா், நடத்துநா்களுக்கு முகக்கவசம், கையுறை, சத்து மாத்திரைகள், கபசுரக்குடிநீா், கைகளை சுத்தமாக வைத்துக்கொள்வதற்கு சோப்பு மற்றும் கிருமி நாசினி போன்றவை வழங்கப்பட்டது. பேருந்துகளில் கிருமிநாசினியும் தெளிக்கப்பட்டது.

பேருந்துகளில் பயணம் மேற்கொண்ட பயணிகளுக்கு, வெப்பமானியைக் கொண்டு உடல் வெப்பநிலைப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. முகக்கவசம் அணியாத பயணிகளுக்கு பேருந்துகளில் பயணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் 25,000 ஆசிரியா்கள் நியமனம் ரத்து: உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

மழை வேண்டி கோனியம்மன் கோயிலில் சிறப்பு பிராா்த்தனை

கோவை, திருப்பூரை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க கோரிக்கை

அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் ஒற்றைச்சாளர முறையை அமல்படுத்த கோரிக்கை

வேளாண் பல்கலை.யில் பட்ட மேற்படிப்பு, பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT