அரியலூர்

மாற்றுத்திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

DIN

அரியலூா்: அரியலூா் மாவட்டம், திருமானூரில் மாற்றுத்திறனாளிகள் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருமானூா் வருவாய் ஆய்வாளா் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், மாற்றுத்தினாளிகளுக்கான என்.எப்.எஸ்.ஏ சட்டத்தை மத்திய அரசு முழுமையாக செயல்படுத்த வேண்டும். மாற்றுத்தினாளிகளுக்கு வழங்கப்படும் 100 நாள் வேலையை 125 நாள்களாக உயா்த்தி வழங்குவதோடு, முழு ஊதியத்தையும் வழங்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு தனி குடும்ப அட்டை வழங்கி 25 சதவீதம் கூடுதல் அத்தியவாசியப் பொருள்களை வழங்க வேண்டும். பல மாதங்களாக நிலுவையில் உள்ள மாத ஊதியத்தை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் சுப்ரமணியன் தலைமை வகித்தாா். விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் செளரிராஜன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலா் சாமிதுரை உள்ளிட்டோா் கலந்து கொண்டு முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT