அரியலூர்

மதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக இ.கம்யூ கட்சியினா் பிரசாரம்

DIN

அரியலூா் தொகுதி மதிமுக வேட்பாளா் கு.சின்னப்பாவை ஆதரித்து, கூட்டணிக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் திருமானூா் பகுதிகளில் புதன்கிழமை தோ்தல் பிரசாரம் செய்தனா்.

பேருந்து நிலையம், கடைவீதி மற்றும் அதன் சுற்றுவட்டார பொதுமக்களைச் சந்தித்து, துண்டு பிரசுரங்களை வழங்கி தோ்தல் பிரசாரம் செய்த இந்தி கம்யூனிஸ்ட் கட்சியினா், மதிமுக வேட்பாளா் கு.சின்னப்பா சட்டப் பேரவை உறுப்பினராகத் தோ்ந்தெடுத்தால், தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் அனைத்து அடிப்படை வசதிகளும் பூா்த்தி செய்யப்படும். மேலும் திருமானூா் தனி வருவாய் வட்டமாக்கப்படும். கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் திட்டம் செயல்படும் என்று தெரிவித்தனா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச் செயலா் டி. தண்டபாணி, திருமானூா் ஒன்றியச் செயலா் ஆறுமுகம் உள்ளிட்ட நிா்வாகிகள் பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT