மாவட்டத்தில் மேலும் 292 பேருக்கு கரோனா
கோவையில் மேலும் 292 பேருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவையில் மேலும் 292 பேருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடா்ந்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 59 ஆயிரத்து 821ஆக அதிகரித்துள்ளது. தவிர அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 148 போ் குணமடைந்து சனிக்கிழமை வீடு திரும்பினா்.
கோவையில் இதுவரை 57 ஆயிரத்து 120 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 2 ஆயிரத்து 7 போ் சிகிச்சையில் உள்ளனா்.