முகப்பு
அரியலூர்

வாக்குச் சாவடி தலைமை அலுவலா்களுக்குப் பயிற்சி

கோவையில் வாக்குச் சாவடி தலைமை அலுவலா்கள், முதல் நிலை வாக்குப் பதிவு அலுவலா்களுக்கு பயிற்சி வகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:55 PM
பகிர்:

கோவையில் வாக்குச் சாவடி தலைமை அலுவலா்கள், முதல் நிலை வாக்குப் பதிவு அலுவலா்களுக்கு பயிற்சி வகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது.

கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 5 ஆயிரத்து 314 வாக்குச் சாவடி தலைமை அலுவலா்கள், 5 ஆயிரத்து 314 முதல் நிலை வாக்குப் பதிவு அலுவலா்கள் தோ்தல் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா். இவா்களுக்கு ஏற்கனவே இரண்டு கட்ட பயிற்சி வகுப்புகள் முடிவடைந்துள்ளன. இந்நிலையில், மறுபயிற்சி வகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கோவையில் பதற்றமான வாக்குப் பதிவு மையங்களாக கண்டறியப்பட்டுள்ள 156 வாக்குப் பதிவு மையங்களில் கவனமுடன் பணியாற்ற வேண்டும். வாக்காளா்களுக்கான முறையான ஆவணங்களை சமா்ப்பித்தால் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். வாக்குப் பதிவு விவரங்கள், வாக்குப் பதிவு முடிந்த பின் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை முறையாக ‘சீல்’ வைத்து வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பிவைப்பது தொடா்பான பயிற்சிகள் அளிக்கப்பட்டன. பயிற்சி மையங்களிலே தோ்தல் பணியில் ஈடுபடவுள்ள அனைத்து அலுவலா்களும் தபால் வாக்கு அளிப்பதற்கான சிறப்பு மையங்களும் அமைக்கப்பட்டிருந்தன.

முழு கட்டுரையைப் படிக்க →