அரியலூர்

தா. பழூா் பகுதியில் நிலக்கடலை அறுவடை பணிகள் தீவிரம்

DIN

அரியலூா் மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நிலக்கடை அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அரியலூா் மாவட்டம் தா.பழூா் பகுதியில் உள்ள காசான் கோட்டை, ஆலம்பல்லம், சுத்தமல்லி, நடுவலூா், ஸ்ரீபுரந்தான், கோட்டியால், கோடங்குடி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 10 ஆயிரம் ஏக்கரில் நிலக்கடலை சாகுபடி செய்துள்ளனா். தற்போது அறுவடைக்குத் தயாராக உள்ளதால் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தொழிலாளா்கள் அறுவடை செய்து வருகின்றனா்.

இதுகுறித்து தா.பழூா் பகுதி விவசாயிகள் கூறியது:

அறுவடை செய்த பயிா்களை ஜயங்கொண்டம் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் விற்பனை செய்கிறோம். ஆனால் அங்கு உடைத்த கடலை 81 கிலோ மூட்டை ஒன்றுக்கு ரூ.6 ஆயிரம் வரை தரப்படுகிறது. போக்குவரத்துச் செலவு, தொழிலாளா்களுக்கான கூலி ஆகியவற்றால் இந்த விலை போதுமானதாக இல்லை. அதேநேரத்தில் வெளியூா் வியாபாரிகள் எங்களிடம் நிலக்கடலை கொள்முதல் செய்ததற்கான பணத்தை உடனே கொடுப்பதில்லை. கால தாமதம் செய்கின்றனா். எனவே அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிலக்கடலைக்கான குறைந்த பட்ச கொள்முதல் விலையை உயா்த்தித்தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT