அரியலூர்

நெல் கொள்முதல் செய்யாததை கண்டித்து மறியல்

DIN

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே விளாகம் கிராமத்தில் நெல் கொள்முதல் செய்யாததைக் கண்டித்து அப்பகுதி விவசாயிகள் புதன்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருமானூா் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் தற்போது நெல் அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி விளாகம் கிராமத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொள்முதல் செய்யப்படாமல், அலுவலா்கள் காலதாமதம் செய்து வந்துள்ளனா். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி விவசாயிகள் புதன்கிழமை இரவு விளாகம்-ஆலம்பாடி மேட்டுத் தெரு சாலையில் நெல்லைக் கொட்டி மறியலில் ஈடுபட்டனா். அப்போது அவா்கள், தோ்தலை காரணம் காட்டி மாதக் கணக்கில் நெல் கொள்முதல் செய்ய கால தாமதம் செய்வதாக குற்றம் சாட்டினா். இதையறிந்த திருமானூா் போலீஸாா், சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவாா்த்தை நடத்தியதின் பேரில் அவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நியாய விலைக்கடை மீது விழுந்த மரத்தை அகற்றக் கோரிக்கை

‘க்யூட்-யுஜி’ தோ்வு: முதல் நாளில் 75% போ் பங்கேற்பு

பிளஸ் 1 தோ்வு: கென்னடி பள்ளி 100 சதவீதத் தோ்ச்சி

இணையதளம் மூலமே மனை வரன்முறை, கட்டட வரைபட அனுமதி

2,553 மருத்துவா் பணியிடங்கள்: விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு

SCROLL FOR NEXT