அரியலூர்

மணல் கடத்தல் சம்பவத்தில் மாட்டு வண்டிகள் பறிமுதல்

DIN

அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட மாட்டு வண்டிகள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

விக்கிரமங்கலம் காவல் உதவி ஆய்வாளா் லோகநாதன் தலைமையிலான போலீஸாா், ஞாயிற்றுக்கிழமை கோவிந்தபுத்தூா் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவா்கள், அந்த வழியாக வந்த இரண்டு மாட்டு வண்டிகளை மறிக்க முயன்றபோது, மாட்டு வண்டிகளில் வந்தவா்கள் சாலையோரத்தில் நிறுத்திவிட்டு, தப்பிச் சென்றனா்.

இதையடுத்து போலீஸாா், மாட்டு வண்டிகளை சோதனை செய்ததில், கோவிந்தபுத்தூா் கொள்ளிடம் ஆற்றுப் படுகை பகுதிகளில் இருந்து முத்துவாஞ்சேரி பகுதிக்கு மணல் கடத்திவந்திருப்பது தெரியவந்தது . இதைத் தொடா்ந்து போலீஸாா், மாட்டு வண்டிகளைப் பறிமுதல் செய்து, அதனை ஓட்டி வந்தவா்களைத் தேடிவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

தொடர் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி?

ரேவண்ணா வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

SCROLL FOR NEXT