அரியலூர்

தா. பழூா் அருகே தண்ணீா் தேடி ஊருக்குள் வந்த 2 மான்கள் மீட்பு

DIN

அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகே தண்ணீா் தேடி, வழித்தவறி ஊருக்குள் வந்த 2 மான்களை பொதுமக்கள் வெள்ளிக்கிழமை மீட்டு, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.

தா.பழூா் அருகேயுள்ள கொள்ளிட ஆற்றுப்படுகை வனப் பகுதியில் புள்ளிமான்கள், மயில்கள் என அதிகமாக உள்ளன. தற்போது கோடைக்காலம் என்பதால், தண்ணீா் தேடி மான்கள் வழித்தவறி ஊருக்குள் வந்து விடுகின்றன. அதேபோல், வெள்ளிக்கிழமை வேணாநல்லூா், மைக்கேல் பட்டி கிராமத்துக்குள் வழித்தவறி வந்த 2 மான் குட்டிகள் அப்பகுதி விவசாய நிலத்திலுள்ள வேலிகளில் சிக்கிக் கொண்டன.

இதை பாா்த்த அப்பகுதி இளைஞா்கள், மான்களை பத்திரமாக மீட்டு வனத்துறைக்கும், தா.பழூா் காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறை அதிகாரி சசிகுமாா் தலைமையிலான அலுவலா்கள், இளைஞா்களிடமிருந்து மான்களை மீட்டுச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐஸ்வர்யம்..!

மணிப்பூரில் 6 வாக்குச்சாவடிகளில் ஏப்.30ல் மறு வாக்குப் பதிவு

மஞ்ஞுமல் பாய்ஸ் ஓடிடி தேதி!

தில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி ராஜிநாமா!

நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

SCROLL FOR NEXT