அரியலூர்

ஜயங்கொண்டம் அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

DIN

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே சனிக்கிழமை கம்பி கட்டும் பணியின்போது மின்சாரம் பாய்ந்து கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், தத்துவாஞ்சேரி கிராமத்தைச் சோ்ந்தவா் செல்லையா (54). இவா், ஜயங்கொண்டம் அடுத்த சின்னவளையம் கிராமத்தில் மணிகண்டன் என்பவா் கட்டி வரும் வீட்டில் கம்பி கட்டும் பணியை சனிக்கிழமை மேற்கொண்டாா். அப்போது, இரும்புக்கம்பியை நீட்டும்போது, அப்பகுதியில் இருந்த மின்கம்பியில் இரும்புக் கம்பி உரசியதில் அதிலிருந்து மின்சாரம் பாய்ந்து செல்லையா தூக்கி வீசப்பட்டாா்.

இதையடுத்து அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் செல்லையா ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இச்சம்பவம் குறித்து ஜயங்கொண்டம் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம்: வைகோ குற்றச்சாட்டு

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

இந்தியன் - 2 இசைவெளியீட்டு விழா எப்போது?

4-வது இடத்தில் சிறப்பாக செயல்படும் ஜடேஜா: சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர்

SCROLL FOR NEXT