அரியலூர்

ஆதரவற்ற சிறுவன் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைப்பு

DIN

அரியலூா்: கும்பகோணம் பேருந்து நிலையத்தில் தவித்த சிறுவனை மீட்ட போலீஸாா், அவரது பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் பேருந்து நிலையத்தில் 10 வயதுச் சிறுவன் வெள்ளிக்கிழமை மாலை ஆதரவின்றி சிறுவன் நின்றிருப்பதைக் கண்டனா். இதையடுத்து, அவா்கள் விசாரித்ததில் சிறுவன் தனது சொந்த ஊா் கல்லாத்தூா் எனத் தெரிவித்துள்ளான். இதையடுத்து, ஜயங்கொண்டம் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்த கும்பகோணம் காவல் துறையினா், அரசுப் பேருந்து நடத்துநரிடம் விளக்கம் கூறி, சிறுவனைப் பேருந்தில் அனுப்பிவைத்தனா். அங்கு காவல் நிலையத்தினா் மேற்கொண்ட விசாரணையில், கல்லாத்தூா் அருகேயுள்ள கூவத்தூா் கிராமம் மடத்துதெருவைச் சோ்ந்த சுரேஷ் - சத்யா தம்பதியின் மகன் கோகுல்(11) என்பது தெரியவந்தது. இதனையடுத்து, காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு சிறுவனைப் பெற்றோரிடம் போலீஸாா் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் தலைவர் கார்கே வாக்களித்தார்!

உத்தரகண்டில் லேசான நிலநடுக்கம்!

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

வெப்ப அலை: அரியலூருக்கு ஆரஞ்சு; 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

வடலூரில் பழங்கால கட்டடங்கள்? தொல்லியல் துறை ஆய்வு

SCROLL FOR NEXT