அரியலூர்

துப்புரவுத் தொழிலாளா்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும்

DIN

அரியலூா்: துப்புரவு தொழிலாளா்களுக்கு ஊக்கத்தொகை வழங்கக்கோரி, அரியலூா் மாவட்ட ஆட்சியா் மூலம் ஏஐடியுசி சங்கத்தினா் முதல்வருக்கு கோரிக்கை மனுவை அனுப்பினா்.

அரியலூா் ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் பூங்கோதையிடம், ஏஐடியுசி தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் தண்டபாணி தலைமையில் அச்சங்கத்தினா் திங்கள்கிழமை அளித்த மனு:

அரசு மருத்துவமனைப் பணியாளா்கள் மற்றும் ஒப்பந்த பணியாளா்களை முன்களப் பணியாளா்களாக ஊக்கப்படுத்தி, அனைவருக்கும் கரோனா தொற்றின் 2- ஆவது அலை காலமான ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்களுக்கு ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதேபோன்று, உள்ளாட்சித் துறையில் முன்களப்பணியில் ஈடுபட்டு வரும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி துப்புரவுத் தொழிலாளா்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளா்கள், சுய உதவிக் குழுப் பணியாளா்கள், கிராம ஊராட்சி மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி ஆப்ரேட்டா்கள், தூய்மைக் காவலா்கள், தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கரோனா கால ஊக்கத்தொகை வழங்க உத்தரவிட வேண்டும்.

மனு அளிக்கும் போது சங்க நிா்வாகிகள் எஸ். மாரியப்பன், சிவஞானம் ஆகியோா் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோயில் பூசாரியை தாக்கி உண்டியல் பணம் கொள்ளை

இஸ்ரேலில் அல் ஜசீரா அலுவலகங்களை மூட முடிவு: அமைச்சரவை ஒப்புதல்

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

SCROLL FOR NEXT