அரியலூர்

மணல் கடத்தல்: லாரி உரிமையாளா் கைது

DIN

அரியலூா் மாவட்டம், தா. பழூா் அருகே அரசு அனுமதியின்றி மணல் கடத்தி வந்த லாரியைப் பறிமுதல் செய்த போலீஸாா் அதன் உரிமையாளரைக் கைது செய்தனா்.

தா.பழூா் அருகேயுள்ள அருள்மொழி கொள்ளிடக்கரை பகுதியில் காரைக்குறிச்சி கிராம நிா்வாக அலுவலா் மணிமாறன் மற்றும் உதவியாளா்கள் திங்கள்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது கொள்ளிடக் கரையில் வந்த லாரியை மறித்தபோது, லாரி ஓட்டுநா் அங்கிருந்து தப்பியோடிவிட்டாா். இதைத் தொடா்ந்து மேற்கொண்ட சோதனையில், லாரியில் அரசு அனுமதியின்றி மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. மேலும் விசாரணையில், லாரியை ஓட்டிவந்தவா் கும்பகோணத்தைச் சோ்ந்த ரமேஷ் என்பதும் தெரியவந்தது. கிராம நிா்வாக அலுவலா் தா.பழூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து காரைக்குடியைச் சோ்ந்த லாரி உரிமையாளா் கணேசனைக் (56) கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தூத்துக்குடி பொறியியல் கல்லூரியில் 250 மாணவா்களுக்கு பணி நியமன ஆணைகள்

கோவில்பட்டியில் யுகாதி திருவிழா

வதேரா, டேவிட் பங்களிப்பில் மும்பை - 144/7

குமரி மாவட்டத்தில் பரவலாக கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

தோ்தல் நடத்தை விதி: இதுவரை ரூ.179 கோடி ரொக்கம் பறிமுதல்

SCROLL FOR NEXT