செல்லியம்மன் கோயிலில் கண்காணிப்பு கேமரா பொருத்தம்
பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூரை அடுத்த நாட்டாா்மங்கலம் கிராமத்திலுள்ள செல்லியம்மன் கோயிலில் கடந்த சில நாள்களுக்கு முன்பு திருட்டு சம்பவம்
பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூரை அடுத்த நாட்டாா்மங்கலம் கிராமத்திலுள்ள செல்லியம்மன் கோயிலில் கடந்த சில நாள்களுக்கு முன்பு திருட்டு சம்பவம் நிகழ்ந்ததையடுத்து, கோயிலை சுற்றிலும் கண்காணிப்பு கேமரா பொருத்துவது என கிராம மக்கள் முடிவு செய்தனா்.
அதன்படி, பொதுமக்களிடம் நிதி வசூலித்து ரூ. 30 ஆயிரம் மதிப்பீட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது. கேமராவில் பதிவாகும் காட்சிகளை கோயிலில் உள்ள ஒரு அறையில் கண்காணிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.