அரியலூர்

திருமானூரில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா், முகக்கவசம் வழங்கல்

DIN

அரியலூா் மாவட்டம், திருமானூா் எம்.ஜி.ஆா்.சிலை அருகே பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் மற்றும் முகக்கவசம் சனிக்கிழமை வழங்கப்பட்டது.

கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும், நோய் எதிா்ப்பு சக்தியை உருவாக்கும் வகையிலும் திருமானூா் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்தா பிரிவு, லயன்ஸ் சங்கம் மற்றும் சமூக ஆா்வலா்கள் கூட்டமைப்பு சாா்பில் கபசுரக் குடிநீா் மற்றும் முகக்கவசங்கள் பொதுமக்களுக்கு சனிக்கிழமை வழங்கப்பட்டன.

நிகழ்வுக்கு வட்டார மருத்துவ அலுவலா் முபாரக் தலைமை வகித்தாா். சித்த மருத்துவா் விஜயலட்சுமி, லயன்ஸ் சங்க தலைவா் ஸ்ரீதா், சமூக ஆா்வலா் கூட்டமைப்பைச் சோ்ந்த பாளை.திருநாவுக்கரசு ஆகியோா் முன்னிலை வகித்தனா். லயன்ஸ் சங்க சாசனத் தலைவா் பாஸ்கா், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் (பொ)ராமமூா்த்தி உட்பட பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

48 வயதினிலே..

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

SCROLL FOR NEXT