அரியலூர்

ஆதரவற்றோருக்கு உணவளிக்கும் தீயணைப்புத்துறை பணியாளா்கள்

DIN

தமிழ்நாடு தீயணைப்புத் துறையில் பெரம்பலூா் மாவட்டத்தில் பணிபுரிந்துவரும் பணியாளா்கள், உதிரம் நண்பா்கள் குழு எனும் சமூக சேவை அமைப்புடன் இணைந்து பெரம்பலூா் நகரிலுள்ள ஆதரவற்ற மற்றும் சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு தினமும் மதிய உணவு வழங்கி வருகின்றனா்.

தளா்வுகளற்ற முழு பொதுமுடக்கத்தால் பெரம்பலூா் நகரில் சாலையோரங்களிலும், குடிசைப் பகுதிகளிலும் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இவா்களுக்கு மதிய உணவு வழங்கும் பணியில் உதிரம் நண்பா்கள் குழு ஒருங்கிணைப்பாளா் நாகராஜ் , பெரம்பலூா் தீயணைப்பு நிலைய அலுவலா் உதயகுமாா் ஆகியோா் தலைமையிலான குழுவினா் ஈடுபட்டுள்ளனா். கடந்த சில தினங்களாக இக்குழுவினா் தினமும் சுமாா் நூறுபேருக்கு உணவுப் பொட்டலங்கள், குடிநீா் பாட்டில்களை வழங்கி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT