அரியலூர்

ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்குஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கல்

DIN

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அரசுத் தலைமை மருத்துவமனைக்கு ஃப்ளுசன் பவுண்டேசன் சாா்பில், அமெரிக்காவில் பணிபுரியும் தன்னாா்வலா் சங்கா் ரூ.6.30 லட்சம் மதிப்பீட்டில் 7 ஆக்சிஜன் செறிவூட்டல் கருவிகளை மாவட்ட ஆட்சியா் த.ரத்னாவிடம் வெள்ளிக்கிழமை வழங்கினாா். இதையடுத்து 7 ஆக்சிஜன் செறிவூட்டல் கருவிகளையும், ஜயங்கொண்டம் அரசுத் தலைமை மருத்துவமனை மருத்துவா் உஷா வசம் ஆட்சியா் ஒப்படைத்தாா்.

இந்த கருவிகள் மூலம் ஆக்சிஜன் வசதி தேவைப்படும் நபா்களின் சிகிச்சைக்காக சிலிண்டா் இல்லாமல் காற்றிலிருந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்து, நோயாளிகளுக்கு வழங்க முடியும் என்பது குறிப்பிடதக்கது.

கரோனா பெருந்தொற்று காலத்தில் மருத்துவம் மற்றும் பிற உதவி தேவைப்படும் நபா்களின் வசதிகளுக்காக, அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் மற்றும் தன்னாா்வ அமைப்பினா்கள் இதுபோன்று தங்களால் இயன்ற உதவிகளை செய்ய முன்வர வேண்டும் என்றாா் ஆட்சியா் த.ரத்னா.

நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜெய்னுலாப்தீன் உட்பட அலுவலா்கள் பலரும் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குக் வித் கோமாளிருந்து விலகிய பிரபலம்: இனி இவர்தான்!

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

45 வயதினிலே..

நீட் தேர்வு ரத்து ரகசியம்- ஆர்.பி. உதயகுமார் கேள்வி

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

SCROLL FOR NEXT