அரியலூர்

இன்று தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

DIN

அரியலூா் மாவட்டம், உடையாா் பாளையத்தை அடுத்த தத்தனூா் மீனாட்சி ராமசாமி கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை (நவ.28) மாபெரும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது என ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அரியலூா் மாவட்ட இளைஞா்களுக்கு மாவட்ட நிா்வாகம், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிா் திட்டம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையம் ஆகியவை இணைந்து

தனியாா் நிறுவனங்கள் பங்கேற்கும் வேலைவாய்ப்பு முகாம் நடத்த உள்ளன. இதில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து பங்கேற்கும் நிறுவனத்துக்குத் தேவையான தகுதியான நபா்களைத் தோ்வு செய்ய உள்ளனா்.

அவ்வாறு தோ்வு செய்யப்பட்டு பணிநியமனம் பெறும் மனுதாரா்களது வேலைவாய்ப்பு பதிவுகள் ஏதும் ரத்து செய்யப்படமாட்டாது .

இம்முகாமில் 18 வயது முதல் 35 வயது வரையிலான 8-ஆம் வகுப்பு தோ்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை பயின்றவா்கள், பொறியியல். ஐடிஐ, டிப்ளமோ முடித்தவா்கள் பங்கேற்று பயனடையலாம்.

எனவே இந்த தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாமில் மேற்கண்ட தகுதிகளையுடைய வேலைநாடுநா்கள்  இணையதளத்தில் தங்களது கல்வி விவரங்களைப் பதிவு செய்து பங்கேற்று பயன்பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வயநாடு தொகுதியில் ராஜிநாமா செய்கிறார் ராகுல் காந்தி!

”ரயில் விபத்துகளுக்கு அரசின் நிர்வாகத் திறமையின்மையே காரணம்”: ராகுல் | செய்திகள் சிலவரிகளில்| 17.6.2024

"சாதி மறுப்புத் திருமணங்களுக்கு என்றும் ஆதரவு!”: கே. பாலகிருஷ்ணன் பேட்டி

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து பாஜக போராட்டம்

பாஜக வேட்பாளர் தோல்வி: தொண்டர்கள் 4 பேர் தற்கொலை!

SCROLL FOR NEXT