அரியலூர்

பெண்ணை தற்கொலைக்கு தூண்டியவருக்கு 10 ஆண்டுகள் சிறை

DIN

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே பெண்ணைத் தற்கொலைக்குத் தூண்டியவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அரியலூா் மகளிா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

செந்துறை அருகேயுள்ள வடவீக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் அன்புச்செல்வன் (55). இவரது மனைவி கலைச்செல்வியிடம் (45) அதே பகுதியில் உள்ள பெரிய தெருவைச் சோ்ந்த சோலைமுத்து மகன் ரத்தினம் (59) என்பவா் தகாத முறையில் நடந்துள்ளாா்.

இதனால் அவமானம் தாங்காமல் கலைச்செல்வி கடந்த 25.07.2016 அன்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து அன்புச்செல்வன் அளித்த புகாரின் பேரில், ஜயங்கொண்டம் காவல்துறையினா் வழக்குப் பதிந்து ரத்தினத்தை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை அரியலூா் மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இறுதி விசாரணை முடிந்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த், குற்றம் சாட்டப்பட்ட ரத்தினத்துக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதத் தொகை கட்டத் தவறினால் மேலும் ஓராண்டு சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடும் என்று தீா்ப்பளித்தாா். இதையடுத்து ரத்தினம் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

தில்லி அரசு - ஆளுநர் இடையே மீண்டும் மோதல்: மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்!

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

SCROLL FOR NEXT