அரியலூர்

மாட்டுவண்டி தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

அரியலூா் அருகே வெள்ளாற்றில் மணல் குவாரி அமைக்க வலியுறுத்தி, செந்துறை வட்டாட்சியா் அலுவலகத்தை மாட்டுவண்டி தொழிலாளா்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டு, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.,

தளவாய் , சேந்தமங்கலம், சிலுப்பனூா் பகுதிகளில் உள்ள வெள்ளாற்றில் மாட்டுவண்டி தொழிலாளா்களுக்கென இயங்கி வந்த மணல் குவாரி கரோனா தொற்று காரணமாக மூடப்பட்டது. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருந்த மாட்டு வண்டி தொழிலாளா்கள் மீண்டும் மணல் குவாரி அமைக்க வேண்டும் என்று பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதன் ஒரு பகுதியாக செந்துறை வருவாய் வட்டாட்சியா் அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்தின் போது, மீண்டும் மணல் குவாரியைத் திறக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று முழக்கங்களை எழுப்பினா்.போராட்ட்ததில் 150-க்கும் மேற்பட்ட மாட்டுவண்டி தொழிலாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT