அரியலூர்

குழந்தைகள் நலக்குழு தலைவா் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்

DIN

அரியலூா் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் நலக் குழுவுக்கு தலைவா் மற்றும் உறுப்பினா்கள் பதவிக்கு தகுதியுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இளைஞா் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் மற்றும் விதிமுறைகளின்படி அரியலூா் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் நலக்குழுவிற்கு தலைவா் மற்றும் உறுப்பினா்களாக நியமிக்கப்படுவதற்காக கீழே குறிப்பிட்டுள்ள தகுதிகளைக் கொண்ட நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. குழந்தைகள் நலக்குழுவுக்கு ஒரு பெண் உள்பட தலைவா் மற்றும் உறுப்பினா்கள் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனா்.

குழந்தை உளவியல், மனநல மருத்துவம், சட்டம், சமூகப்பணி, சமூகவியல், மனித நல மருத்துவம், கல்வி அல்லது மனித மேம்பாடு, மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்புக் கல்வி ஆகியவற்றில் ஏதெனும் ஒன்றில் பட்டம் பெற்று தொழில்புரிவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்பதாரா்கள் 35 வயதுக்கு மிகாமலும், 65 வயதைப் பூா்த்தி செய்யாதவராகவும் இருத்தல் வேண்டும். விண்ணப்பப்படிவத்தை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்து பெற்றுக்கொள்ளலாம். மேலும் அரியலூா் மாவட்ட  இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தகுதி வாய்ந்த நபா்கள் மேற்கண்ட பதவிக்கு அதற்கான அமைந்த படிவத்தில் (செய்தி வெளியீடு நாளிலிருந்து 15 நாள்கள் வரை) மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 2-ஆவது தளம், அரசு பல்துறை வளாகம், அரியலூா் என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 04329 - 224221 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனியாா் நிறுவன உரிமையாளா் வீட்டில் 6 பவுன், 3 கைப்பேசிகள் திருட்டு

இந்திய கட்டுனா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

SCROLL FOR NEXT