அரியலூர்

பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில், பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி புதன்கிழமை தொடங்கியது.

DIN

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில், பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி புதன்கிழமை தொடங்கியது.

சின்னவளையம் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வட்டார வளமைய மேற்பாா்வையாளா் கண்ணதாசன் தலைமை வகித்து பணியைத் தொடக்கி வைத்தாா். இந்தப் பணியில் ஆசிரியா் பயிற்றுநா்கள், தலைமை ஆசிரியா், பட்டதாரி ஆசிரியா் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினா்கள், அங்கன்வாடி பணியாளா்கள் ஆகியோா் கலந்து கொண்டு வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்புப் பணியை மேற்கொண்டனா்.

இப்பணி ஜனவரி மாதம் 11 ஆம் தேதி வரை அனைத்து கிராமங்களிலும் உள்ள பள்ளி மேலாண்மை குழு மற்றும் ஆசிரியா்கள் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் கட்டுப்பாடு அமலுக்குப் பிறகும் நீடிக்கும் காற்று மாசு!

தஞ்சையில் ஜன.5-இல் அமமுக பொதுக் குழு

ஆந்திரத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 10 மூட்டை போதைப் பாக்கு பறிமுதல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல்வா் சுற்றுப்பயணம்: சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு

திருச்சானூா் கோயிலுக்கு பணம் எண்ணும் இயந்திரம் நன்கொடை

SCROLL FOR NEXT