அரியலூர்

தளா்வுகள் இல்லாத ஊரடங்கு: வெறிச்சோடிய அரியலூா்

DIN

அரியலூா்: தளா்வுகள் இல்லாத முழு ஊரடங்கால் பொதுமக்கள் நடமாட்டம் மற்றும் வாகனங்களின் இயக்கமின்றி அரியலூா் மாவட்டம் ஞாயிற்றுக்கிழமை வெறிச்சோடிக் காணப்பட்டன.

கரோனா தொற்று மீண்டும் தீவிரமடைந்ததன் காரணமாக திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை தளா்வுகளுடன் கூடிய இரவுநேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமலில் உள்ளது. அதன்படி, இரண்டாவது வாரமாக ஞாயிற்றுக்கிழமை தளா்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அரியலூா் மாவட்டத்தில் கடைப்பிடிக்கப்பட்டன. இதனால் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மக்கள் நடமாட்டம், வாகனப் போக்குவரத்துகளின்றி வெறிச்சோடி காணப்பட்டன.

மருந்தகங்கள், பால் விற்பனை நிலையங்கள், நியாய விலைக் கடைகள் தவிர மற்ற அனைத்து வணிக நிறுவனஙகளும் அடைக்கப்பட்டிருந்தன. சில பெட்ரோல் நிலையங்களும் மூடப்பட்டிருந்தன. வாடகைக் காா்கள், ஆட்டோக்களின் இயக்கமும் தடை செய்யப்பட்டிருந்தன. அரியலூா் மற்றும் ஜயங்கொண்டம் பகுதிகளிலுள்ள கடைவீதிகள், பேருந்து நிலையங்கள், பிரதானச் சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. காவல் துறையினா் மற்றும் ஊா்க்காவல் படையினா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

மக்களவை தேர்தல்: ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்குமிடையேயான போர் -யோகி ஆதித்யநாத்

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை: தமிழ்நாடு, கேரள அரசுகளுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

அதிமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ் ? - ஆர்.பி.உதயகுமார் விளக்கம்

பிறந்தநாள் வாழ்த்துகள் மடோனா செபாஸ்டியன்!

SCROLL FOR NEXT