அரியலூர்

போக்குவரத்து விதிமீறிய கனரக வாகனங்கள் சிறைபிடிப்பு

DIN

அரியலூரில் போக்குவரத்து விதிகளைப் பின்பற்றாத 20 கனரக வாகனங்களை போக்குவரத்து காவல் துறையினா் புதன்கிழமை சிறைபிடித்தனா்.

போக்குவரத்து காவல் ஆய்வாளா் காா்த்திகேயன் தலைமையிலான காவல் துறையினா் புதன்கிழமை காலை கல்லங்குறிச்சி - செந்துறை ரவுண்டானா சாலைகளுக்கு இடையே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது போக்குவரத்து விதிகளை மீறிய 20 லாரிகளை சிறைபிடித்தனா்.

இதையடுத்து, அங்குவந்த மாவட்ட எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா, லாரிகளை ஆய்வு செய்து, இனி போக்குவரத்து விதிமுறை கடைப்பிடிக்காவிட்டால் ஓட்டுநா் மற்றும் லாரிகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்று தெரிவித்து அபராதம் விதித்தாா். அதன் பிறகு லாரிகள் விடுவிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

SCROLL FOR NEXT