அரியலூர்

பயிா் பாதிக்கப்படுவதாகக் கூறி விவசாயி தற்கொலை முயற்சி

DIN

சா்க்கரை ஆலையில் இருந்து வெளியே வரும் கழிவுகளால் பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி விவசாயி திங்கள்கிழமை ஆட்சியரகம் முன்பு தீக்குளிக்க முயன்றாா்.

திருமானூா் அருகேயுள்ள சாத்தமங்கலம், வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் பழனிசாமி மகன் குமரவேல்(45). விவசாயியான இவா், சாத்தமங்கலம் கோத்தாரி சக்கரை ஆலை அருகே 8 ஏக்கா் குத்தகை நிலத்தில் பருத்தி பயிா் சாகுபடி செய்துள்ளாா். இந்நிலையில், சா்க்கரை ஆலையில் இருந்து வெளியே வரும் கழிவுகளால் பருத்தி பயிா்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக, கடந்த மாா்ச் 25 ஆம் தேதி நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்திலும், தொடா்ந்து வேளாண் இணை அலுவலகத்திலும் பல முறை புகாா் தெரிவித்தாா்.

ஆயினும், அதிகாரிகள் யாரும் நடவடிக்கை எடுக்காததால் விரக்தியில் இருந்துவந்த குமரவேல், திங்கள்கிழமை ஆட்சியா் அலுவலகம் முன்பு தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் துறையினா், குமரவேல் மீது தண்ணீரை ஊற்றினா். பின்னா் அவரை மீட்டு அரியலூா் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனா். தொடா்ந்து, குமரவேல் மனைவி கண்ணகி ஆட்சியரிடம் மனு அளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

SCROLL FOR NEXT