அரியலூர்

‘மண்புழு உரப் பயன்பாடுகளை விவசாயிகள் அறிதல் அவசியம்’

DIN

மண்புழு உரப் பயன்பாடு குறித்து அனைத்து விவசாயிகளும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும் என அரியலூா் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் இரா.பழனிசாமி அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அரியலூா் மாவட்டத்தின் மண் வளத்தில் அங்கக சத்துகளின் அளவு குறைவாக உள்ளது. தொழு உரம், மண்புழு உரம் ஏதாவது ஒன்றை இட வேண்டும். அங்கக சத்து அதிகமுள்ள மண்புழு உரத்தை இடுவதால் மண்ணின் வளம் காப்பதுடன் கூடுதல் மகசூல் பெறலாம். இத்தகைய சிறப்பு வாய்ந்த மண்புழு உரத்தினை பயன்பாடு குறித்து அனைத்து விவசாயிகளும் தெரிந்து கொள்வது அவசியமாகும்.

இந்தியாவில் 500 வகையான மண்புழுக்கள் இருந்தாலும் யூட்ரிலஸ் யூசினியே, எய்சீனியா போடிடா, பெரியோனிக்ஸ் போன்ற மண்புழுக்களே அதிகமாக மண்புழு உரம் தயாரிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தழை, மணி, சாம்பல் சத்து மட்டுமல்லாது நுண்ணூட்டச் சத்துக்களும் மண்புழு உரத்தில் அடங்கியுள்ளன. இவ்வாறு மண்புழு உரத்தை இட்டு மண் வளத்தையும், உற்பத்தியையும் அதிகரிக்குமாறு தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT