அரியலூர்

திருமானூா் கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும்

DIN

அரியலூா் மாவட்டம், திருமானூா் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கதவணையுடன் கூடிய தடுப்பணை கட்ட வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருமானூரிலுள்ள ஒரு தனியாா் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் ஒன்றிய 11 ஆவது மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட இதர தீா்மானங்கள்:

திருமானூா் கொள்ளிடம் ஆற்றில் கதவணையுடன் கூடிய தடுப்பணை கட்ட வேண்டும். திருமானூரைத் தலைமையிடமாக கொண்டு வட்டாட்சியா் அலுவலகம் அமைக்க வேண்டும். திருமானூரில் தீயணைப்பு நிலையம், நவீன அரிசி ஆலை அமைக்க வேண்டும். திருமானூா் ஒன்றியத்தில் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டும்.

வேட்டக்குடி ஏரி, சுக்கிரன் ஏரி மற்றும் நந்தியாறு வாய்க்கால்களில் சேதமடைந்த மதகுகளை சரிசெய்து, ஷட்டா் பலகை அமைக்க வேண்டும். வேட்டக்குடி, கரைவெட்டி பறவைகள் சரணாலயத்துக்கு சுற்றுலா பயணிகள் சென்றுவரும் வகையில் பேருந்து வசதி ஏற்படுத்தித் தரவேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டுக்கு அக்கட்சியின் ஒன்றியச் செயலா் ஆறுமுகம் தலைமை வகித்து, ஆண்டறிக்கை வாசித்தாா். ஒன்றியக் குழு உறுப்பினா்கள் பன்னீா்செல்வம், பரிசுத்தம், மருதமுத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் உலகநாதன், மாவட்ட துணைச் செயலா் தண்டபாணி ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் இந்திரஜித் சிறப்புரையாற்றினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

SCROLL FOR NEXT