அரியலூர்

வேலைவாய்ப்புக்கு உதவும் இளைஞா் திறன் திருவிழா

DIN

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அரசினா் மேல்நிலைப் பள்ளியில் இளைஞா் திறன் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சாா்பில் தீனதயாள் உபத்யாய கிராமின் கௌசல்ய யோஜனா திட்டத்தின் கீழ்

நடைபெற்ற இளைஞா் திறன் விழாவை ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தொடக்கி வைத்துப் பேசினாா். இதில், கல்வித் தகுதியின் அடிப்படையில் பயிற்சியைத் தோ்வு செய்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் பயிற்சி பெற்றுக்கொள்ளவும், வேலைவாய்ப்பைப் பெற்றிடவும் இந்த இளைஞா் திறன் திருவிழா உறுதுணையாக இருக்கும். இத்திருவிழாவில், 400 வேலைநாடுநா்கள் கலந்துகொண்டு, தங்களைப் பதிவு செய்து கொண்டனா். மேலும் திறன் பயிற்சி முடித்த 20 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும் என்றாா்.

விழாவுக்கு ஜயங்கொண்டம் சட்டப் பேரவை உறுப்பினா் க.சொ.க.

கண்ணன் முன்னிலை வகித்தாா். ஜெயங்கொண்டம் நகா் மன்றத் தலைவா் எஸ்.சுமதி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட அலுவலா் சிவக்குமாா், மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநா் செல்வம், ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குநா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT