அரியலூர்

வெளிநாட்டுப் பயணம் செல்லும் மாணவருக்குப் பாராட்டு விழா

DIN

வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள உள்ள ஜெயங்கொண்டத்தை அடுத்த புதுச்சாவடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவருக்கு திங்கள்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

மாணவா்களின் உள்ளாா்ந்த திறமைகளை வெளிக் கொணரும் வகையில் தமிழக அரசால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள கல்வி இணைச் செயல்பாடுகளில் ஒன்றான வானவில் மன்றம், அறிவியல் கண்காட்சி போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று, மாநில அளவில் வென்று வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும் 8 ஆம் வகுப்பு மாணவா் வெ. நித்திஷ்குமாா் மற்றும் வழிகாட்டியான அறிவியல் பட்டதாரி ஆசிரியா் இலா.செங்குட்டுவன் ஆகியோருக்கு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஆமணக்கந்தோண்டி ஊராட்சித் தலைவா் செந்தமிழ்ச்செல்வி நடராஜன் தலைமை வகித்தாா். வட்டாரக் கல்வி அலுவலா் அ. மதலைராஜ் வெற்றி பெற்ற மாணவருக்கு நினைவு பரிசு வழங்கி பாராட்டினாா். வட்டாரக் கல்வி அலுவலா் க. ராசாத்தி, ஆசிரியா் பயிற்றுநா் சு. ஐயப்பன், தலைமை ஆசிரியா் ச. சாந்தி உள்பட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

தனித்து உண்ணாத் தன்மையாளன்

SCROLL FOR NEXT