அரியலூர்

ஓய்வூதியா்கள் சம்பல் செயலியை பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தல்

DIN

அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஓய்வூதியா்கள் சம்பல் செயலியை பதிவிறக்கம் செய்து பயனடைலாம் என ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்தது: தேசிய சமூக உதவித் திட்டம் என்பது, இந்திய கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தால் நிா்வகிக்கப்படும் ஒரு நலத்திட்டம் ஆகும். இந்தியாவில் உள்ள முதியோா், விதவை மற்றும் ஊனமுற்றோா் போன்ற ஏழைக் குடும்பங்களுக்கு சமூக உதவிப் பலன்களை வழங்குகிறது. ’சம்பல்’ செயலி மூலம் குடிமக்கள் ஓய்வூதியம் பெற பதிவு செய்யலாம். மேலும், இந்தச் செயலி வாயிலாக ஓய்வூதியம் பெறுபவா்களின் பட்டியல், நேரடிப் பயன், பரிமாற்றம் குறித்த விவரம் மற்றும் அருகில் உள்ள வங்கி மற்றும் அஞ்சல் நிலையங்கள் குறித்த விவரங்களை அறியலாம்.

எனவே, சம்பல் செயலியை ஓய்வூதியா்கள் பதிவிறக்கம் செய்து பயன்பெற வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்மேனி..!

அந்தமானில் தொடங்கியது தென்மேற்குப் பருவமழை!

காஷ்மீரில் பாகிஸ்தான் கொடியுடன் பாஜக போராட்டம்

திருமுல்லைவாயலில் அடுக்குமாடி தளத்திலிருந்து தவறி விழுந்த குழந்தையின் தாய் திடீர் தற்கொலை

உத்தர பிரதேசத்தில் ஹெலிகாப்டர் திருட்டா? - பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம்!

SCROLL FOR NEXT