அரியலூர்

செங்குந்தபுரம் காலபைரவருக்கு முளைப் பாரிகை பூஜை

DIN

ஜெயங்கொண்டம் அருகேயுள்ள செங்குந்தபுரம் காலபைரவருக்கு முளைப்பாரிகை பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் மாதந்தோறும் தேய்பிறை அஷ்டமி அன்று மாலை நேரத்தில் பொதுமக்கள் பல்வேறு நலன்கள் பெற சிறப்பு முளைப் பாரிகை பூஜை நடைபெறுகிறது. இதையொட்டி சனிக்கிழமை நடைபெற்ற முளைப்பாரிகை விழாவை முன்னிட்டு கடந்த மாதம் டோக்கன் பெற்று முளைப்பாரி பூச்சட்டிகளை உருவாக்கி வளா்த்து வந்த பக்தா்கள் சனிக்கிழமை மாலை மேளதாளங்களுடன் ஊா்வலமாக அவற்றை எடுத்து வந்தனா். தொடா்ந்து, காலபைரவருக்கு அா்ச்சனை செய்யப்பட்டது. பின்னா் கோயில் அருகேயுள்ள திருக்குளத்தில் முளைப்பாரிகையை மக்கள் விட்டு வழிபட்டனா். வழிபாட்டிற்கான ஊா்வலத்தில் 200-க்கும் மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

SCROLL FOR NEXT