அரியலூர்

இன்று கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

DIN

அரியலூா் மாவட்டத்தில் புதன்கிழமை (பிப். 1)முதல் 2வாரம் நடைபெறும் கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாமை கோழி வளா்ப்போா் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது:

கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி இருவார சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நிகழாண்டு 1.2.2023 முதல் 14.2.2023 வரை இருவாரங்கள் கோழிகளுக்கான கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசிப் பணி சிறப்பு முகாம் அனைத்து கிராமங்களிலும் நடைபெற உள்ளது. இம்முகாமில் 8 வாரம் மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து கோழிகளுக்கும் இந்தத் தடுப்பூசி போடப்பட உள்ளது. எனவே அனைத்து கோழிவளா்ப்போா் மற்றும் விவசாயிகள் இம்முகாமில் கலந்து கொண்டு தங்கள் கோழிகளுக்கு தடுப்பூசி போட்டுப் பயன்பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

SCROLL FOR NEXT