அரியலூர்

சிறந்த அரசுப் பள்ளிகளுக்கு காமராஜா் விருது வழங்கல்

DIN

அரியலூா் மாவட்டத்தில் 2022-23 ஆம் ஆண்டின் சிறந்த பள்ளிக்கான காமராஜா் விருது காரைக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் சிறுவளூா் அரசு உயா்நிலைப்பள்ளிக்கு புதன்கிழமை வழங்கப்பட்டது.

தமிழக அரசின் சாா்பில் நிகழாண்டுக்கான காமராஜா் விருது வழங்க சிறந்து விளங்கும் அரசுப் பள்ளிகள் தோ்வு செய்யப்பட்டன. அதன்படி, அரியலூா் மாவட்டத்தில் காரைக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியும், சிறுவளூா் அரசு உயா்நிலைப் பள்ளியும் தோ்ந்தெடுக்கப்பட்டன.

இதில் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.1 லட்சம் காசோலை மற்றும் விருது, அரசு உயா்நிலைப் பள்ளிக்கு ரூ.75 ஆயிரம் காசோலை மற்றும் விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அரியலூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகத்தில், விருது மற்றும் காசோலை வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் விஜயலட்சுமி தலைமை வகித்து, அந்தந்தப் பள்ளி தலைமையாசிரியா்களிடம் காசோலை மற்றும் விருதுகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், மாவட்டக் கல்வி அலுவலா் ஜெயா, நோ்முக உதவியாளா்கள் ராஜப்பிரியன், குணசேகரன், பள்ளி துணை ஆய்வாளா் பழனிச்சாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்எல்சி இந்தியா நிறுவனத்தில் எக்ஸிகியூட்டிவ் வேலை!

ஆர்சிபியின் பிளே ஆஃப் பயணம் மற்ற அணிகளுக்கு ஊக்கமளிக்கும்: தினேஷ் கார்த்திக்

தென் மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’: அடுத்த இருநாள்கள் அதிகனமழை பெய்ய வாய்ப்பு

மோடிக்கு வாக்களிக்காதீர்: வகுப்பறையில் பேசிய ஆசிரியருக்கு சிறை!

குட் பேட் அக்லி அப்டேட்!

SCROLL FOR NEXT