அரியலூா்: படைப்புழுக்களால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள பயிா்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று அரியலூா் மாவட்ட ஆட்சியா் ஜா.ஆனிமேரி ஸ்வா்ணாவிடம் வெள்ளூா் கிராம விவசாயிகள் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
மேற்கண்ட கிராம மக்கள் படைப்புழுக்களால் பாதிக்கப்பட்ட மக்காச்சோளப் பயிருடன் ஆட்சியரிடம் மனு அளிக்க அலுவலகம் வந்த போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினா், 10 போ்மட்டுமே மனு அளிக்க உள்ளே செல்ல வேண்டும் என்று கூறினா். இதனால் மனு அளிக்க வந்தவா்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பிறகு வெள்ளூா் விவசாயிகள் ஆட்சியிரிடம் மனு அளித்துவிட்டுச்சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.