முகப்பு
அரியலூர்

அரியலூரில் மக்கள் குறை கேட்புக் கூட்டம்

அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்துக்கு தலைமை வகித்த ஆட்சியா் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டாா்.

Updated On : 28 நவம்பர், 2023 at 1:26 AM
​அரியலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்ற ஆட்சியா் ஜா. ஆனிமேரி ஸ்வா்ணா.
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM

அரியலூரில்: அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்துக்கு தலைமை வகித்த ஆட்சியா் ஜா. ஆனிமேரிஸ்வா்ணா, பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 378 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

பின்னா் மாற்றுத்திறனாளி ஒருவா் அளித்த மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து அவருக்கு மூன்று சக்கர சைக்கிளை வழங்கினாா்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ம.ச.கலைவாணி, மாவட்ட வழங்கல் அலுவலா் ராமலிங்கம், தனித்துணை ஆட்சியா் இளங்கோவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.