அரியலூர்

அரியலூர் அருகே பட்டாசு தயாரிக்கும் ஆலையில் விபத்து: 9 பேர் பலி

கீழப்பழுவூர் அடுத்த வெ.விரகாலூர் கிராமத்திலுள்ள பட்டாசு தயாரிக்கும் ஆலையில் திங்கள்கிழமை ஏற்பட்ட விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.

DIN

கீழப்பழுவூர் அடுத்த வெ.விரகாலூர் கிராமத்திலுள்ள பட்டாசு தயாரிக்கும் ஆலையில் திங்கள்கிழமை ஏற்பட்ட விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.

திருமழபாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் வெ.விரகாலூரில் பட்டாசு தயாரிக்கும் ஆலை வைத்துள்ளார். அங்கு திங்கள்கிழமை காலை 10 மணிக்கு மேல் பணியாளர்கள் வேலை செய்துக் கொண்டிருந்த போது, திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.

தொடர்ந்து பட்டாசு வெடித்து வரும் நிலையில், அங்கு பணியில் ஈடுபட்டு வந்திருந்தவர்களில் 10 பேர் தப்பித்து வெறியேறினர். இதையறிந்த பொதுமக்கள் பலத்த காயத்துடன் வெளியே வந்த 3 பேரை மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர்.

தகவலறிந்து விரைந்துச் சென்ற தீயணைப்புத் துறையினர், தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்ட போது, உள்ளே 9 சடலங்கள் கருகிய நிலையில் கிடப்பது தெரியவந்தது. மேலும் சிலர் உள்ளே சிக்கியிருப்பதாகவும் தெரியவருகிறது.  

இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.  சம்பவ இடத்தில் ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ்கான் அப்துல்லா உள்ளிட்டோர் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லி செங்கோட்டை அருகே வெடித்த கார்: விபத்தா? சதிச்செயலா?

புத்துணர்வு... மாலத்தீவுக் கடல்... ராய் லட்சுமி!

ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கியின் 2-வது காலாண்டு லாபம் உயர்வு!

ஜம்மு - காஷ்மீரில் 2,900 கிலோ வெடிப்பொருள் பறிமுதல்: தாக்குதல் திட்டம் முறியடிப்பு

அமெரிக்காவில் வாழ்வோருக்கு 2000 டாலர்கள்: டிரம்ப் | செய்திகள்: சில வரிகளில் | 10.11.25

SCROLL FOR NEXT