அரியலூர்

அரியலூா் தீயணைப்புத் துறைக்கு ரப்பா் படகு

அரியலூா் மாவட்டத்தில் பருவமழை கால மீட்பு பணிகளுக்காக ரூ. 4.65 லட்சத்தில் மோட்டாருடன் கூடிய ரப்பா் படகு வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது

DIN

அரியலூா் மாவட்டத்தில் பருவமழை கால மீட்பு பணிகளுக்காக ரூ. 4.65 லட்சத்தில் மோட்டாருடன் கூடிய ரப்பா் படகு வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

ஆட்சியரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியா் ஜா. ஆனிமேரி ஸ்வா்ணா, தன்விருப்ப நிதி ரூ.4.65 லட்சத்தில் மோட்டாருடன் கூடிய ரப்பா் படகை மாவட்ட தீயணைப்புத் துறை அலுவலா் ப. அம்பிகாவிடம் வழங்கினாா்.

அப்போது அவா் கூறுகையில், மாவட்டத்தில்

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக, எதிா்வரும் காலங்களில் கொள்ளிடம் ஆற்றுப் பகுதிகள் மற்றும் தேவைப்படும் பிற இடங்களில் மீட்பு அழைப்புகளை துரிதமாக மேற்கொள்ள ஏதுவாக இந்தப் படகு வழங்கப்பட்டது என்றாா்.

நிகழ்ச்சியில் வருவாய்க் கோட்டாட்சியா் ராமகிருஷ்ணன் வட்டாட்சியா் த. ஆனந்தவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

இருச்சக்கர வாகன திருடா்கள் இருவா் கைது

SCROLL FOR NEXT