காட்டகரம் மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா
அரியலூா்: அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அடுத்த காட்டகரம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில், திருவிழாவையொட்டி, தீமிதி நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
விழாவையொட்டி கடந்த 10 ஆம் தேதி கொடியேற்றப்பட்டு சுவாமிகளுக்கு தினந்தோறும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று வந்தன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இதில், நூற்றுக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று, கோயில் அருகே அமைக்கப்பட்டிருந்த தீக்குழியில் இறங்கி தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா். விழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.