முகப்பு
அரியலூர்

தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு

தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு

Updated On : 30 அக்டோபர், 2024 at 8:24 PM
அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்களில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி உள்ளிட்டோா்.
பகிர்:

மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலா் ம.ச.கலைவாணி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் பரிமளம், மாவட்ட வழங்கல் அலுவலா் ராமலிங்கம், மாவட்ட நிலை அலுவலா்கள் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலா்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

எஸ்.பி. அலுவலகம்: இதே போல, மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செ.செல்வராஜ் உறுதிமொழி வாசிக்க, காவல்துறை அலுவலா்கள், அமைச்சுப் பணியாளா்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.

நிகழ்ச்சியில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் விஜயராகவன், ஆயுதப்படை துணைக் காவல் கண்காணிப்பாளா் அருள்முருகன், காவல் ஆய்வாளா்கள் செல்வகுமாரி, இளங்கிள்ளி வளவன், ஆய்வாளா் மணிகண்டன் உட்பட பலரும் கலந்து கொண்டனா்.