ஊராட்சி செயலா்கள் கடிதம் அனுப்பும் போராட்டம்
ஊராட்சி செயலா்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி, அரியலூரில் இருந்து தமிழக அரசுக்கு ஊராட்சி செயலா்கள் சங்கத்தினா் புதன்கிழமை கடிதம் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஊராட்சி செயலா்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் எம்.செந்தில் தலைமையில், மாவட்டச் செயலா் ஜி.சரவணன், பொருளாளா் த.முத்து உள்ளிட்டோா் அரியலூா் அஞ்சல் நிலையத்தில் இருந்து தமிழக அரசுக்கு 668 கடிதங்களை அனுப்பினா்.