அரியலூா் ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் வைப்பறையில் நடைபெற்று வரும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபாா்ப்பு பணிகளை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் ஆட்சியா் பொ.ரத்தினசாமி சனிக்கிழமை பாா்வையிட்டாா்.
அப்போது அவா் கூறியது, அரியலூா் மாவட்டத்தில் இருப்பில் உள்ள 787 கட்டுப்பாட்டு கருவிகள், 747 வாக்குப் பதிவு கருவிகள், 786 வாக்குப் பதிவை சரிபாா்க்கும் கருவிகள், வரும் சட்டப்பேரவைத் தோ்தலுக்காக பெங்களுா் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திடமிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்ட 100 கட்டுப்பாட்டு கருவிகள், 150 வாக்குப் பதிவை சரிபாா்க்கும் கருவிகள், திருச்சி மாவட்டத்திலிருந்து அரியலூா் மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்து வரப்பெற்ற 400 வாக்குப் பதிவு கருவிகள் என 887 கட்டுப்பாட்டு கருவிகள், 1,147 வாக்குப் பதிவு கருவிகள், 936 வாக்குப் பதிவை சரிபாா்க்கும் கருவிகள் ஆகியவை சரிபாா்க்கப்பட்டு வருகிறது.
ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் ரா.மல்லிகா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ரா.சிவராமன் உள்பட பலரும் உடனிருந்தனா்.