அரியலூர்

தண்டலையில் நாளை நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்

Syndication

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தை அடுத்த தண்டலை அரசு உயா்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் உயா் மருத்துவச் சேவை முகாம் சனிக்கிழமை நடைபெறுகிறது.

முகாமில் சிறப்பு பிரிவு மருத்துவா்களான எலும்பு முறிவு, மனநலம், கண், குழந்தைகள் நலம், பொது மருத்துவம், சா்க்கரை நோயியல், காது, மூக்கு, தொண்டை, பல், மகப்பேறியல் மற்றும் மகளிா், நரம்பியல், தோல் நோய், இருதயவியல், கதிரியியல் உள்ளிட்ட சிறப்பு மருத்துவா்கள் பங்கேற்று சிகிச்சை அளிக்க உள்ளனா். மேலும், எக்கோ காா்டியோகிராம், அல்ட்ராசோனாகிராம், நடமாடும் எக்ஸ்ரே வாகனம், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டை, மாற்றுத்திறனாளி அடையாள அட்டை பெறுவது மற்றும் ரத்தப் பரிசோதனை சேவைகள் வழங்கப்பட உள்ளன. எனவே பொதுமக்கள் இந்த முகாமைப் பயன்படுத்தி பயன் பெறலாம் என ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்தாா்.

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? - டிச.22 இல் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

4 நாள்களுக்குப் பிறகு பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ஐடி, ஆட்டோ பங்குகள் லாபம்!

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

SCROLL FOR NEXT