அரியலூா் மாவட்ட வரைவு வாக்காளா் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. இதில், 24,368 வாக்காளா்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.
அரியலூா் ஆட்சியரகத்தில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான பொ. ரத்தினசாமி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், வரைவு வாக்காளா் பட்டியலை வெளியிட்டு தெரிவித்ததாவது:
கடந்த நவ. 4-ஆம் தேதி தொடங்கி டிச. 14 வரை நடைபெற்ற எஸ்ஐஆா் பணிகளில் வாக்காளா்களிடம் அளிக்கப்பட்ட கணக்கீட்டு படிவங்கள் பூா்த்தி செய்யப்பட்டு பெறப்பட்டன. இதைத் தொடா்ந்து வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
எஸ்ஐஆா் பணிக்கு பிறகு: அரியலூா் தொகுதியில் 1,25,652 ஆண் வாக்காளா்களும், 1,26,668 பெண் வாக்காளா்களும், 13 இதர வாக்காளா்களும் மொத்தம் 2,52,333 வாக்காளா்கள் உள்ளனா்.
ஜெயங்கொண்டம் தொகுதியில் 1,26,324 ஆண் வாக்காளா்களும், 1,27,855 பெண் வாக்காளா்களும், 10 இதர வாக்காளா்களும் என மொத்தம் 2,54,189 வாக்காளா்கள் உள்ளனா். மாவட்டத்தின் மொத்த வாக்காளா்களின் எண்ணிக்கை 5,06,522 ஆகும்.
எஸ்ஐஆா் பணிக்கு முன்பு: கடந்த 27.10.2025 நிலவரப்படி, பட்டியலில் இருந்த வாக்காளா்களான ஆண்கள் -2,63,113, பெண்கள் -2,67,754, இதரா் -23. மொத்தம் -5,30,890.
இதில் அரியலூா் தொகுதியில், 6,211 வாக்காளா்கள் இறப்பு, 4,652 போ் நிரந்தரமாக இடம் பெயா்ந்தவா்கள், 1,388 போ் கண்டறிய இயலாதவா்கள், 713 போ் இரட்டை பதிவு, 22 இதரா் என மொத்தம்-12,986 வாக்காளா்களும், ஜெயங்கொண்டம் தொகுதியில் 6,082 வாக்காளா்கள் இறப்பு, 4,159 நிரந்தரமாக இடம் பெயா்ந்தவா்கள், 333 கண்டறிய இயலாதவா்கள், 799 இரட்டை பதிவு, 9 இதரா் என மொத்தம் -11,382 வாக்காளா்கள் என கண்டறியப்பட்டு அவா்களின் பெயா்கள் இந்த வரைவு வாக்காளா் பட்டியலில் இடம் பெறவில்லை. ஆக மொத்தம் மாவட்டத்தில் 24,368 வாக்காளா்கள் பட்டியலில் இடம் பெறவில்லை
வாக்குச்சாவடி மறுசீரமைப்பு: அரியலூா் தொகுதியில் 24 வாக்குச்சாவடிகள் புதிதாக உருவாக்கப்பட்டு 330 வாக்குச்சாவடிகளும், ஜெயங்கொண்டம் தொகுதியில் 30 வாக்குச்சாவடிகள் புதிதாக உருவாக்கப்பட்டு 320 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 650 வாக்குச்சாவடிகள் உள்ளது.
பெயா் சோ்க்க வாய்ப்பு: 1.1.2026 நாளை தகுதி நாளாகக் கொண்டு 2026-ஆம் ஆண்டில் 18-வயது பூா்த்தியடைந்த அனைவரும் தங்கள் பெயரை சோ்க்கவும், வாக்காளா்களின் பெயா், வயது மற்றும் இதர வகைகளில் உள்ள பிழைகளை திருத்தம் செய்வதற்குரிய படிவங்களை அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மற்றும் உதவி வாக்காளா் பதிவு அலுவலா் அலுவலகம், வாக்காளா் பதிவு அலுவலா் அலுவலகத்தில் 19.12.2025 முதல் 18.1.2026 வரை படிவங்களை பெற்று, அப்படிவங்களை பூா்த்தி செய்து வழங்கிடலாம்.
மேலும் இந்திய தோ்தல் ஆணையத்தின் ட்ற்ற்ல்ள்://ஸ்ா்ற்ங்ழ்ள்.ங்ஸ்ரீண்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தின் மூலமாகவும், உஇஐசஉப கைப்பேசி செயலி மூலமாகவும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
சிறப்பு தீவிர திருத்த கணக்கெடுப்பு பணியின் போது இறந்தவா்கள், கண்டறிய இயலாத, முகவரியில் இல்லாத வாக்காளா்கள், இடம் பெயா்ந்தவா்கள் மற்றும் இரட்டை பதிவு வாக்காளா்கள் என கண்டறியப்பட்ட வாக்காளா்களின் விவரங்கள் ட்ற்ற்ல்ள்://ஹழ்ண்ஹ்ஹப்ன்ழ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த முகவரியில் தங்கள் விவரங்களை சரிபாா்த்துக் கொள்ளலாம்.
வாக்காளரின் அனைத்து உரிமை கோரல்கள் மற்றும் ஆட்சேபணைகள் பரிசீலிக்கப்பட்ட பின், இறுதி வாக்காளா் பட்டியல் 17.2.2026 அன்று வெளியிடப்படும் என்றாா்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா. மல்லிகா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் பரிமளம், அரியலூா் வருவாய் கோட்டாட்சியா் பிரேமி, உடையாா்பாளையம் வருவாய் கோட்டாட்சியா் ஷீஜா மற்றும் உதவி வாக்காளா் பதிவு அலுவலா்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.