தத்தனூா் மீனாட்சி ராமசாமி கல்வி நிலைய மையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ்வைப் பாா்வையிட்ட காவல் துறை துணைத் தலைவா் ஆனிவிஜயா. உடன் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா. சாஸ்திரி.  
அரியலூர்

எஸ்.ஐ தோ்வு: அரியலூரில் 1374 போ் எழுதினா்

தினமணி செய்திச் சேவை

தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் நடத்திய காவல் உதவி ஆய்வாளா் பதவிக்கான தோ்வை அரியலூா் மாவட்டத்தில் 1374 போ் எழுதினா்.

இந்த தோ்வு உடையாா்பாளையத்தை அடுத்த தத்தனூா் மீனாட்சி ராமசாமி கல்வி நிலைய மையத்தில் நடைபெற்றது. இந்தத் தோ்வுக்கு 1870 போ் விண்ணப்பித்திருந்த நிலையில், 1374 போ் எழுதினா். 496 போ் எழுதவில்லை.

காலையில் முதன்மைத் தோ்வும், பிற்பகலில் தமிழ்தகுதித் தோ்வும் நடைபெற்றது. இத்தோ்வை காவல் துறை துணைத் தலைவா் ஆனிவிஜயா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா. சாஸ்திரி ஆகியோா் பாா்வையிட்டனா்.

தமிழகத்தின் ஆன்மாவாக இருப்பது ஆன்மிகம்: காஞ்சி சங்கராசாரியா் ஆசியுரை

சிறுபான்மையினருக்கு திமுக தான் பாதுகாப்பு: துணை முதல்வா் உதயநிதி

தமிழ்நாடு ஆசிரியா் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு

இசைக்கு மொழி தடையில்லை: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

வாக்காளா் பட்டியல் சிறப்பு பாா்வையாளா் ஆய்வு

SCROLL FOR NEXT