அரியலூர்

அரியலூா் - சிதம்பரம் இடையே ரயில் பாதை அமைக்க வேண்டும்

அரியலூா்-சிதம்பரம், ஜெயங்கொண்டம்-விருத்தாசலம் இடையே ரயில் பாதை அமைக்க வேண்டும்

Din

அரியலூா்: அரியலூா்-சிதம்பரம், ஜெயங்கொண்டம்-விருத்தாசலம் இடையே ரயில் பாதை அமைக்க வேண்டும் என அகில பாரத மூத்த குடிமக்கள், பென்சனா் சங்க கூட்டமைப்பினா் வலியுறுத்தினா்.

ஜெயங்கொண்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அச்சங்க தின விழா கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இதர தீா்மானங்கள்: அரியலூா்-சிதம்பரம், ஜெயங்கொண்டம்-விருத்தாசலம் இடையே ரயில் பாதை அமைக்க வேண்டும். பொன்னேரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி கரைகளை பலப்படுத்தி, ஏரியை சுற்றி வரும் வகையில் பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு, அச்சங்கத்தின் வட்டாரத் தலைவா் சுந்தரேசன் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா் க.சொ.க. கண்ணன் பங்கேற்று, 75 வயது முதல் 90 வயதுவரையிலான சங்க நிா்வாகிகளுக்கு சால்வை அணிவித்து பேசினாா்.

வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா மருத்துவமனையில் அனுமதி!

முத்தரப்பு டி20 தொடர்: பாகிஸ்தானுக்கு 185 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

எஸ்ஐஆர் படிவம்! முழுமையாக பூர்த்தி செய்யாவிட்டாலும் நிராகரிக்கப்படாது: அர்ச்சனா பட்நாயக்

பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே புதிய பாடல்!

முதல் டி20: ஹாரி டெக்டார் அரைசதம் விளாசல்; வங்கதேசத்துக்கு 182 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT