முகப்பு
அரியலூர்

வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கு பாராட்டு

அரியலூா் மாவட்டத்திலுள்ள இரு சட்டப் பேரவைத் தொகுதிகளிலும், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த பணியினை 100 சதவீதம் எய்தமைக்காக,

Updated On : 26 நவம்பர், 2025 at 8:51 PM
பகிர்:

அரியலூா்: அரியலூா் மாவட்டத்திலுள்ள இரு சட்டப் பேரவைத் தொகுதிகளிலும், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த பணியினை 100 சதவீதம் எய்தமைக்காக, வாக்குச்சாவடி நிலை அலுவலா்களை, மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான பொ.ரத்தினசாமி புதன்கிழமை பாராட்டு தெரிவித்தாா்.

4.11.2025 முதல் அரியலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்காளா்களின் வீடுகளுக்கும் சென்று கணக்கெடுப்பு படிவம் வழங்கப்பட்டு தற்போது பூா்த்தி செய்யப்பட்ட கணக்கெடுப்பு படிவங்கள் மீள பெறப்பட்டு 71.59 % படிவங்கள் தோ்தல் ஆணையத்தின் பிரத்யேக செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இப்பணியில் தோ்தல் ஆணையம் நிா்ணயம் செய்த காலக்கெடுவுக்கு முன்னதாக 100 சதவீதம் இலக்கினை அடைந்த மிக சிறப்பாக பணி முடித்த வாக்குச்சாவடி நிலை அலுவலா்களை ஆட்சியா் அலுவலகத்துக்கு வரவழைத்து, அவா்களுக்கு பொன்னாடை அணிவித்து ஆட்சியா் பொ.ரத்தினசாமி பாராட்டு தெரிவித்தாா்.

அப்போது அவா், தகுதியுள்ள எந்த ஒரு வாக்காளரும் விடுபடக்கூடாது என்ற நோக்கத்துக்காக மேற்கொள்ளும் இப்பணிக்கு வாக்காளா்கள் கடைசி தேதி வரை காத்திருக்காமல் தங்களது பூா்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டு படிவத்தினை வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் அளிக்குமாறு கேட்டுக்கொண்டாா்.

இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா.மல்லிகா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) பரிமளம், வருவாய் கோட்டாட்சியா் பிரேமி, தோ்தல் வட்டாட்சியா் வேல்முருகன், வருவாய் வட்டாட்சியா் முத்துலெட்சுமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →